நிமலராஜன் படுகொலை வழக்கு விசாரணை அறிக்கை வெளியீடு.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இதன்போது நிமலராஜனின் உருவப் படத்துக்குச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வகுமாரால் அந்த அறிக்கையின் முதல் பிரதி நிமலராஜனின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் அறிக்கையின் பிரதிகள் நிகழ்வில் கலந்துகொண்ட ஏனையோருக்கும் வழங்கப்பட்டன.
………………..
