காணாமல்போன குடும்பஸ்தர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு!
காணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி, ஹினிதும பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்கல்ல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தலங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 10 ஆம் திகதி தனது காணிக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தினர் இது தொடர்பில் ஹினிதும பொலிஸ் நிலையத்தில் நேற்று (11) காலை முறைப்பாடு அளித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில் காணாமல்போனவர் மல்கல்ல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹினிதும பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
………………
