டிரம்பின் ஆயுதமேந்திய ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் சாவடிகளை சுற்றி வளைத்துள்ளனர்

 

சமீபத்திய தகவல்களின்படி,  டிரம்பின் சில ஆதரவாளர்கள் வாக்கு எண்ணப்படும் சாவடிகளுக்கு முன்னால்  நின்றவாறு “வாக்குகளைத் திருடுவதை நிறுத்துங்கள்” என்று கூச்சலிடுகிறார்கள்.

அரிசோனாவில் உள்ள வாக்குகளை எண்ணும் மையங்களுக்கு முன்னால் டிரம்பின் ஆதரவாளர்கள் சிலர்  ரைபிள் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

“Stop the steal!” (திருடுவதை நிறுத்து!)  , “We want Trump”  (எங்களுக்கு டிரம்ப் வேண்டும்) போன்ற கோஷங்களை எழுப்பியவர்களில் பெரும்பாலோர் கோவிட்டின்  அதிக ஆபத்து இருந்தபோதிலும் முகமூடி அணியாமல் அங்கு நிற்கிறார்கள் என ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.

அரிசோனா மாநில தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஒரு சிறிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார் என்று தெரிந்ததும் டிரம்ப் ஆதரவாளர்கள் கோபத்தில் உள்ளனர்.

பைடென் அரிசோனாவை வென்றால், அது ஜனநாயகக் கட்சிக்கு 11 தேர்தல் வாக்குகளை பெற்று தரும்.  அப்படியானால்,  பைடனுக்கு தற்போது ஜனாதிபதி பதவிக்கு தேவையாக உள்ள ஆறு வாக்குகள் அங்கிருந்து கிடைக்கும்.

அங்கு வாக்கு எண்ணிக்கை 88% முடிந்து விட்டது.

தற்போது, ​​பைடென் ஜோர்ஜியா மாநிலத்தையும் வென்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் , இலக்ரோல் கொலேஜின் அவரது எண்ணிக்கை 269 ஆக உயரும்.

எனவே அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பைடெனின் சர்ச்சைக்குரிய மாநிலமான அரிசோனாவின் முடிவுகளால் தீர்மானிக்கப்படப் போகிறது.

Leave A Reply

Your email address will not be published.