ரணிலும் சஜித்தும் அப்பா, மகன் போல் – ஒன்றிணையும் சந்தர்ப்பம் வந்துள்ளது என்கிறார் மனோ.
ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் அப்பாவும் மகனும் போன்று என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அப்பாவும் (ரணில்) மகனும் (சஜித்) ஒன்றிணையும் சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை வெளியில் இருந்து நாம் செய்து வருகின்றோம்.” – என்றார்.
