இசைத்துறைத் தலைவர் ரெபேர்ட் புதிய பீடாதிபதியாகத் தெரிவு!

சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றுகை மற்றும் காண்பியக் கலைகள் பீடத்தின் பீடாதிபதியாக இசைத்துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பீடாதிபதி எஸ். சிவரூபனின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதைத் தொடர்ந்து, புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான பீடச் சபைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இடம்பெற்ற தேர்தலில் தற்போதைய இசைத்துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதனடிப்படையில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு த.ரெபேர்ட் அருட்சேகரம் பீடாதிபதியாகச் செயற்படுவார்.

Leave A Reply

Your email address will not be published.