கோர விபத்தில் இளைஞர், யுவதி பரிதாப மரணம்!
விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ஹொரணை – மொரகஹஹேன வீதியில் கதன்வில விகாரைக்கு அருகில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரும் யுவதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மொரகஹஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியும், 24 வயதுடைய இளைஞனும் ஆவர்.
இந்த விபத்து தொடர்பில் ஹொரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
