புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: ஓடும்போதே வங்கி ஊழியர் உயிரிழப்பு

சென்னையில் நடந்த புற்றுநோய் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தில் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

இதில் தனியார் வங்கி ஊழியரான பரமேஷ்(24) என்பவர் பங்கேற்றார். தாம்பரத்தைச் சேர்ந்த இவருக்கு ஓட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அங்கு அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பொலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.