காதல் தோல்வியால் யுவதி உயிர்மாய்ப்பு!
கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி உயிர்மாய்க்க முயற்சித்தபோது உறவினர்களால் காப்பாற்றப்பட்ட அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேலதிக சிகிச்சையின்போது நேற்று அவர் உயிரிழந்தார்.
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
