பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில் 254 பேர் விசேட சுற்றிவளைப்பில் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 254 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 26 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 21 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன், பிற போக்குவரத்துக் குற்றங்களுக்காக 4 ஆயிரத்து 336 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.