மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2,500 நாள் சம்பளம் வழங்கினாலும் போதாது! – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு.

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற்போது வழங்கப்படுகின்ற நாள் சம்பளம் போதாது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2,500 ரூபா வழங்கப்பட்டாலும் அது போதாது.

மலையக மக்கள் அனைத்து வழிகளிலுமே முடக்கப்பட்ட மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

எமது ஆட்சியில் மலையக மக்களுக்கு விடிவு கிடைக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.