அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த நபர் சிலாபத்தில் துப்பாக்கியுடன் சிக்கினார்!

அனுமதிப் பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கி, சட்டவிரோத மதுபானம் மற்றும் வரி இன்றி கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் சிலாபம் – காக்கப்பள்ளிய பகுதியில் வைத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து, அனுமதி பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள், 202 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் வரி இன்றி கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.