பெங்களூருவில் நெகிழ்ச்சி: லட்சக்கணக்கான பணம் அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

பெங்களூருவில் பயணி ஒருவர் தவறுதலாக விட்டுச் சென்ற பணம் அடங்கிய பையை ஆட்டோ ஓட்டுநர் மிகுந்த நேர்மையுடன் திருப்பி கொடுத்த சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயல் டிஜிட்டல் இணையத்தில் பரவி மிகுந்த பாராட்டைப் பெற்று வருகிறது.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், பணம் நிறைந்த பையை திரும்ப பெற்றுக் கொண்ட பயணி நன்றி உணர்வுடன் பாராட்டுவதும், ஆட்டோ ஓட்டுநர் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.

சமூக ஊடக பயனர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.