மதுரை மீனாட்சி அம்மனைத் தரிசித்த ரணில் தம்பதி.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இன்று சென்று வழிபட்டனர்.
தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட ரணில் தம்பதியினருக்குக் கோயில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
அவர்கள் இருவரும் அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டதைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ரணிலிடம் இந்திய ஊடகங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதிலும் ஊடகங்களுக்கு அவர் எவ்வித பதிலும் கூறாது அவ்விடத்தில் இருந்து சென்றார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




