25 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருடன் தம்பதியர் சிக்கினர்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் தம்பதியினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 21 கிலோ கிராம் குஷ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.