காலியில் இரண்டு இடங்களில் ரயில்களுடன் கார்கள் மோதி விபத்து! – ஐவர் காயம்.

காலியில் நேற்று இரு இடங்களில் ரயில்களுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்தச் சம்பவங்களில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

பியதிகம ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்தக் கார் மோதியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெள்ள நிவாரண உதவிகளைக் கொண்டு சென்ற காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, ஹிக்கடுவ – நாரிகம பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவை ஒன்றைக் கடக்க முற்பட்ட நிலையில், கார் ஒன்று, ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட அதில் பயணம் செய்த நால்வர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.