முல்லைத்தீவில் இருந்து வேலைக்கு யாழ்ப்பாணம் வந்த சிறுவன் வீட்டுச் சுவர் விழுந்து பரிதாப உயிரிழப்பு!
வீட்டை இடித்துக்கொண்டிருந்த சிறுவன் சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு – விசுவமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி சிறுவன் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்து, நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம், குருநகர் – பாஷையூரில் பழைய வீட்டை இடித்துக்கொண்டிருந்தார். ஒரு பக்க சுவரினை இடித்துவிட்டு அந்தச் சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடினார். இதன்போது மற்றைய சுவர் அவர் மீது விழுந்ததில் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
