கொழும்பில் துப்பாக்கியுடன் வயோதிபர் ஒருவர் சிக்கினார்.

ரி – 56 ரக துப்பாக்கியுடன் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் கொழும்பு – கிராண்ட்பாஸ் ஜோசப் வீதி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 27 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொழும்பு 14ஐச் சேர்ந்த 67 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.