உள்ளக விளையாட்டரங்கு கட்டடத் தொகுதி திறப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் இருநூற்றி எட்டு மில்லியன் ரூபா செலவில் பல்கலைக்கழக மைதானத்தின் தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள
நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டரங்கு கட்டடத் தொகுதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்படும் நிகழ்வு எதிர் வரும் வியாழக்கிழமை
பல்கலைக்கழக உடற்கல்விப் பணிப்பாளர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் விருந்தினராகக் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் கல்வெட்டைத் திறந்து வைக்க, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா உள்ளக விளையாட்டரங்கைத் திறந்து வைக்கவுள்ளார்.

Nநாட்டில் தற்போது எழுந்துள்ள கோவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இந்தத் திறப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நிகழ்வுகளை நேரலையாக ஒலிபரப்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமாகிய பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட திட்டமுன் மொழிவுக்கமைய 2017 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணத்தினால் அடிக்கல் நாட்டபட்டிருந்தது.
சுமார் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்திருக்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கு சர்வதேசத் தர நியமங்களுக்கமைய அமைக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.