ஜனாதிபதி வேட்பாளர் சரியான தருணத்தில் – மொட்டுக் கட்சி அறிவிக்கும் என்கிறார் நாமல்.
“ஜனாதிபதித் தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.” – என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள நாம் எந்த நேரத்திலும் தாயாராக இருக்கின்றோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும்.
அம்பாந்தோட்டையில் இருந்தாலும், கொழும்பில் இருந்தாலும் எமது கட்சிக்குரிய ஆலோசனையை வழங்கி கட்சியை மஹிந்த ராஜபக்ஷ திறம்பட வழிநடத்துவார்.” – என்றார்.
