கம்பஹாவில் யுவதி ஒருவர் கழுத்து நெரித்துக் கொலை! – காதலனைத் தேடி பொலிஸார் வலைவீச்சு.

இளம் யுவதி ஒருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி யுவதி, பெற்றோரும் சகோதரர்களும் நேற்று மாலை வெளியிடத்துக்குச் சென்ற வேளை வீட்டில் தனியாகத் தங்கியிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை தொடர்பில் யுவதியின் 25 வயது காதலன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார், தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.