தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளர் நேற்று சுட்டுப் படுகொலை.
கொழும்பு, தெஹிவளை – மெரைன் ட்ரைவ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஹோட்டலின் உரிமையாளர் படுகாயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அங்கு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
