அழிந்துபோன 37,000 முகவரிகளின் தகவல்களை வழங்க மலேசியா இணக்கம்

கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள முகவரிகள் அழிந்துள்ள பொதிகள் குறித்த தகவல்களை வழங்குவதற்கு மலேசியா இணக்கம் தெரிவித்துள்ளது.

பொதிகளிலுள்ள அடையாளக் குறியீட்டு இலக்கங்களை (Barcode) இயலுமான வரை அடையாளம் காணப்பட்டு, அவை மலேசியா அஞ்சல் நிர்வாகத்திற்கு அனுப்பி அதனூடாக முகவரிகளை கண்டறியும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள 45,000 பொதிகளில் 37,000 இற்கும் அதிகமான பொதிகளில் முகவரிகள் அழிந்துள்ளதாக தெரிவித்துள்ள தபால் மா அதிபர், பெயர் பொறிக்கப்பட்டுள்ள முறைமைக்கு அமைய முகவரிகள் அழிவடைவது சாதாரண விடயம் எனவும் கூறியுள்ளார்.

மலேஷியா ஊடாக குறித்த பொதிகள் தொடர்பான முகவரிகள் கிடைத்ததன் பின்னர், அதன் உரிமையாளர்களிடம் அவற்றை கையளிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டினார்.

Comments are closed.