அறிவை ஏந்த வேண்டிய கல்வி அரசியல் அம்பாக மாறும் அவலம் – சஜித் அணி மீது அமைச்சர் நளிந்த பாய்ச்சல்.

இந்த நாட்டில் கல்வியைக் கூட அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் நிலைக்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணி வந்துவிட்டது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“பேரிடரை வைத்து அரசியல் நடத்திய எதிரணி, தற்போது கல்வி மறுசீரமைப்பையும் குழப்ப முற்படுகின்றது. இதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.

கல்வியில் ஆபாசத்தை புகுத்துவதற்கு முயற்சி இடம்பெறுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அடியோடு நிராகரிக்கின்றோம்.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் கல்வி மறுசீரமைப்பு நிச்சயம் நடக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.