டெல்லியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு
புதுடெல்லி,
டெல்லியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.44 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.86 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.06 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
EQ of M: 2.8, On: 19/01/2026 08:44:16 IST, Lat: 28.86 N, Long: 77.06 E, Depth: 5 Km, Location: North Delhi, Delhi.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/Qm15FGz2Pf— National Center for Seismology (@NCS_Earthquake) January 19, 2026
