களியாட்ட நிகழ்வில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை!
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுனாமிவத்தைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வின்போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை இரவு நடந்த விருந்துபசாரத்தின் போது, அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் எனவும், படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பிஸ்டல் வகை துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
