வாக்காளர் இடாப்பு மீளாய்வு ஆரம்பம்!

வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிகளை இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதும் இந்தப் பணிகள் இடம்பெறவுள்ளன.

தகுதியுள்ள அனைத்து மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் வகையில், அவ்வப்போது வாக்காளர் பட்டியல் மீளாய்வுக்கு உட்படுவது வழமையாகும். இந்த வருடத்துக்கான மீளாய்வு நடவடிக்கைகளே நேற்று ஆரம்பித்துள்ளன.

இதன்படி, கிராம உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்களப் பணியாளர்கள் இணைந்து வீடு வீடாக மக்களின் விவரங்களைத் திரட்டவுள்ளனர்.

எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் உள்ளடக்கியே இந்த வாக்காளர் மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.