காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!
தோட்டப் பகுதியில் காயங்களுடன் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை, அகலவத்தை, திரிவானகெட்டிய தோட்டப் பகுதியில் இருந்து நேற்று இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் திரிவானகெட்டிய தோட்டப் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண் என்று களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
