லொறி மோதி மாணவி சாவு! – இரத்தினபுரியில் துயரம்.
வீதி யோரத்தில் நடந்து சென்ற பாடசாலை மாணவி லொறி மோதி உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் இரத்தினபுரி, எலபத்த பொலிஸ் பிரிவின் கனதொல – இலுக்தென்ன வீதியில் உள்ள 79 ஆம் இலக்க ரப்பர் தோட்டத்துக்கு அருகில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அலுகெட்டிய பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து எலபத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
