பாடசாலைக் காவலாளி உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சிக்கினர்!

கொழும்பு, கோமாகமை பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாடசாலை ஒன்றின் காவலாளி எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கடுவெலை மற்றும் கெஸ்பாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 34 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவர்களில் 34 வயதுடைய நபர், அப்பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வருபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் நீண்டகாலமாக இப்பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தனரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.