திருக்கோவில் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்.

திருக்கோவில் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச சபையின் 33வது அமர்வு இன்று பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன் தலைமையில் நடைபெற்றது.

 

இதன்போது கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் விசேட கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் சபைக்கு கிடைக்கப் பெற்ற விசேட அறிவித்தல்கள் சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்தல் சபைக்கு கிடைக்கப் பெற்ற முறையான வினாக்கள் தொடர்பாக ஆராய்தல் ஒத்தி வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்hபக ஆராய்தல் குழுத் தீர்மான அறிக்கை 2021 வரவு செலவு திட்டம் மற்றும் சென்ற வரவு செலவு திட்டத்தை அங்கிகரித்தல் போன்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் சபைக் கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தவிசாளர் இ.வி.கமலராஜனினால் 2021 ஆண்டுக்கான திட்டங்கள் வாசிக்கப்பட்டு வாக்கெடுப்புக்காக சபையோரின் முன் வைக்கப்பட்டன. இதன்போது முன்னாள் சபை தவிசாளரும் இன்னாள் உறுப்பினருமான வி.புவிதராஜன் கடந்த மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சார்ந்து குறை நிறைகள் தொடர்பாக தனது கருத்துக்கள் முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சபை உறுப்பினர் வி.புவிதராஜனின் கருத்துக்களை தவிசாளர் இ.வி.கமலராஜனினால் கவனத்தில் கொள்ளப்படும் என்ற உறுதிமொழி வழங்கியதைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 03 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் 02 உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் 02 உறுப்பினர்களும், இலங்கை தமிழ் காங்கிரஸின் 01 உறுப்பினரும், தமிழர் விடுதலை கூட்டடணி கட்சியின் 01 உறுப்பினருமாக 16 சபை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் 2021ஆம் ஆண்டுக்கான ஆறு கோடியே 10 இலட்சம் ரூபாவிற்கான வரவு செலவு திட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

 

அமர்வில் திருக்கோவில் சபையின் செயலாளர் ஜே.ஆர்.சத்தியசீலன் கலந்து கொண்டதுடன் பார்வையாளராக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.