ஹெரோயின், மின்னணு தராசுடன் போதைப்பொருள் வியாபாரி கைது! – பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதிரடி.

களுத்துறை, பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினரால் நேற்று இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 103 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், ஒரு மின்னணு தராசு மற்றும் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வியாபாரியான மேற்படி சந்தேகநபர் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வலான பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.