கால்வாயில் விழுந்து வயோதிபப் பெண் பலி! – மாத்தளையில் சோகம்.

மாத்தளை – இரத்தோட்டை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் இரத்தோட்டை, கைகாவல பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.