இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பாப்பரசருக்கு ஜனாதிபதி அழைப்பு – வத்திக்கான் அதிகாரிகளிடம் விசேட அழைப்பிதழ் கையளிப்பு.

பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் அருட்தந்தை மிஹைட்டா பிளாஜ்ஜைச் சந்தித்து இந்த அழைப்பிதழைக் கையளித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சார்பாக, அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த உத்தியோகபூர்வ அழைப்பை வத்திக்கான் அதிகாரிகளிடம் வழங்கினார்.

இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பாப்பரசரின் விஜயம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.