மத்திய கிழக்கில் இலங்கையர்கள் 1700 பேருக்கு கொரோனா : 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

மத்திய கிழக்கின் 17 நாடுகளில் வேலைகளுக்கு சென்று வசிக்கும் 1,700 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக துணை பொது மேலாளர் மங்கள ரண்தெனிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 23 வெளிநாட்டு தொழிலாளர்கள் இறந்துவிட்டதாகவும், இத் தகவல்களை உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

200 க்கும் மேற்பட்டோர் சுகம் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறந்தவருக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்தும் , அவர்களது உறவினர்களுக்கு உதவிகள் வழங்குவது குறித்தும் பணியகம் தகவல்களை சேகரித்து வருகிறது.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் சுகாதார நிலையை அந்தந்த தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் மூலம் பணியகம் தொடர்ந்து கவனித்து வருவதாக அவர் கூறினார்.

Comments are closed.