இமாச்சலப் பிரதேசத்தில் கோர விபத்து: சுற்றுலா வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 3 பேர் பலி!

சிம்லா,

இமாச்சலபிரதேச மாநிலம் குலு மாவட்டம் ஜொலொரி பகுதியில் இருந்து பந்தர் பகுதி நோக்கி நேற்று இரவு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் சுற்றுலா பயணிகள் 20 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இரவு பெய்த மழை காரணமாக சாலை மோசமான நிலையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.