செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் அடையாளம்! – அகழ்வுப் பணிகள் தீவிரம்.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்று அடையாளம் காணப்பட்ட மூன்று மனித எலும்புக்கூடுகளையும் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 244 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டவற்றில் 240 மனித எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அகழ்வுப் பணிகள் ஊடாகப் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.