மோ. சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் மரணம் – மூவர் வைத்தியசாலையில்..
புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியின் 134 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் படுகாயமடைந்த கப்புகொல்லவ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர், சிகிச்சைக்காக ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
