இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம்! – 25 ஆயிரத்தைக் கடந்த நோயாளர்கள்; 12 பேர் உயிரிழப்பு.
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 25 ஆயிரத்து 82 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோய்த்தாக்கத்தின் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபைப் பகுதிகளில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின், தாமதிக்காது உடனடியாகத் தகுதியான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
