துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக அமைச்சர்கள் 31 பேர் பின்னடைவு!

தமிழகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பெரும்பாலான திமுக அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் திமுக அமைச்சர்கள் பலர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை – எ.வ. வேலு

தூத்துக்குடி – கீதா ஜீவன்

மன்னார்குடி – டி.ஆர்.பி. ராஜா

திருவெறும்பூர் – அன்பில் மகேஸ்

திருச்சி மேற்கு – கே.என். நேரு

சைதாப்பேட்டை – மா. சுப்பிரமணியன்

காட்பாடி – துரைமுருகன்

மதுரை மத்தி – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ஆலந்தூர் – தா.மோ. அன்பரசன்

நெல்லை – அப்பாவு

உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

காலை 10 மணி நிலவரப்படி தவெக 100, அதிமுக 80, திமுக 53 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. திமுக 3-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.