மின்னல் தாக்கி விவசாயி சாவு! – பொத்துவிலில் சோகம்.

அம்பாறை மாவட்டம், பொத்துவில் – லாகுகலை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 54 வயதுடைய நபர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இப்பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது, லாகுகலை பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர் தனது வயல் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது, வயலில் உள்ள மரமொன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த ‘வாடி’யில் (காவல் அறை) அவர் தங்கியிருந்தபோது, பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியுள்ளது.

மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.