ஆட்சியமையக்க விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!

விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக (தனிப்பெரும்பான்மை இன்றி) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் தன்னிடம் கேட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்கிறது.

தொடர்ந்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுதொடர்பாக நாளை மறுநாள்(மே 8) அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது. விசிக தலைவர் திருமாவளவனும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

விசிக – 2, இந்திய கம்யூ. – 2, மார்க்சிஸ்ட் கம்யூ. – 2 , காங்கிரஸ் – 5 தொகுதிகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.