முதல்வராகப் பதவியேற்றார் விஜய்!

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார்.

தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ள நிலையில், மாநில முதல்வராகக் கட்சியின் தலைவர் ச. ஜோசப் விஜய் பதவியேற்றார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்துவைத்தார். அதுமட்டுமின்றி, தமிழகத்தின் இளம் வயது முதல்வராகவும் விஜய் பெருமை பெற்றார்.

மேலும், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், விசிகவினர், பாஜக தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பங்கேற்றனர்.

விஜய் முதல்வராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.