ஒரே ஒரு ஓட்டு… ஓயாத சட்டப் போராட்டம்: தவெக வெற்றிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். தமக்கு வரவேண்டிய தபால் வாக்கு ஒன்று, வேலூர் அருகேயுள்ள திருப்பத்தூர் தொகுதி அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த வாக்கு எண்ணப்பட்டிருந்தால் குலுக்கல் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டு இருக்கும், எனவே, வழக்கு முடியும் வரை சீனிவாச சேதுபதி சட்டசபை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று மனுவில் அவர் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு வாக்குச்சீட்டால் தேர்தல் முடிவு மாறியிருக்கிறது, தபால் வாக்கு மாறினால் என்ன நடைமுறை என்பது தெரியாத ஒன்றாக உள்ளது என்றும் பெரியகருப்பன் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்துள்ள வழக்கின் தீர்ப்பைத் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.