நீட் தேர்வு அதிரடியாக ரத்து: வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை!
கடந்த மே 3 ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
2026 – 2027 மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்றது.
ஆனால், தேர்வுக்கு முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக விவகாரம் நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது மாணவர்களிடம் 20,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கையால் எழுதப்பட்ட இந்த மாதிரி வினாத்தாள் பிரதியில் மொத்தம் 281 கேள்விகள் இருந்தன. மே 3 அன்று நடந்த அசல் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 135 கேள்விகள் ஒத்துப்போகின்றன.
இந்த வினாத்தாளை கைப்பற்றி ராஜஸ்தான் காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மே 3 ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளது.
மீண்டும் திகதி அறிவிக்கப்பட்டு மறுதேர்வு நடத்தப்படும். மாணவர்கள் இந்த தேர்வுக்கு மீண்டும் புதிய பதிவு செய்யவோ, மீண்டும் கட்டணம் செலுத்தவோ தேவை இல்லை. மேலும், நீட் தேர்வு கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப கொடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
