சிலாபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவுடன் ஒருவர் சிக்கினார்!
சிலாபம், கரவிட்டாகார பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை மாரவில விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் மாரவில முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று வியாழக்கிழமை கரவிட்டாகார பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 180 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சிலாபம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இப்பகுதிக்குக் கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
