குடும்பத் தகராறு முற்றியதால் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர கணவர்.

கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியைக் கணவரே கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்டகாலமாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. நேற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளதுடன், இதன்போது ஆத்திரமடைந்த கணவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியைக் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான கணவரைத் திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காகப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளத.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.