டெல்லியில் பரபரப்பு: முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து!

புதுடெல்லி,

நிதி ஆயோக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்பட அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

டெல்லி பயணம்
இதற்காக முதல்-அமைச்சர் விஜய் நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்றார். விமான நிலையத்தில் இருந்து மதியம் 1 மணி அளவில் தமிழக அரசு இல்லம் சென்றார். தொடர்ந்து போலீஸ் மரியாதையை ஏற்றுக்கொண்டு அரசு இல்லத்தின் உள்ளே சென்று தனது அறையில் ஓய்வு எடுத்தார்.

தீ விபத்து
இந்த நிலையில், டெல்லியில் முதல்-அமைச்சர் விஜய் தங்கியுள்ள தமிழ்நாடு இல்லத்தின் கேன்டீனில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ஊழியர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கேண்டீனில் உள்ள ஏசி இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.