செம்மணிப் புதைகுழியில் மேலும் 12 எலும்புக்கூடுகள் – மொத்த எண்ணிக்கை 353 ஆக உயர்வு.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 23ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதன்போது, மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளில் 7 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தம் 353 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 334 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலதிக எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.