3 குழந்தைகள்… ஒரே திகதி… ஒரே டாக்டர்! நெல்லை குடும்பத்தின் உலக சாதனை!

நெல்லை

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஜெபர்சன். இவர் மதபோதகராக உள்ளார். இவரது மனைவி சீபா மனோஸ். இந்த தம்பதிக்கு ஜஹஸ்லேல் மனோஸ், ஜசானியா ஷரோன் மற்றும் ஜானியா செராபின் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

ஒரே தேதியில் பிறப்பு
இவரது மூத்த மகன் 2015-ம் ஆண்டும், 2-வது மகள் 2017-ம் ஆண்டும், 3-வது மகள் 2025-ம் ஆண்டுகளிலும் பிறந்தனர். இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் 3 குழந்தைகளும் ஜூன் 10-ந் திகதியன்று பிறந்துள்ளனர். இவர்களின் பிறப்பில் இன்னொரு வியப்பூட்டும் ஒற்றுமையும் உள்ளது. 3 பேரும் பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரே தனியார் நர்சிங் ஹோமில் பிறந்துள்ளனர். இந்த 3 குழந்தைகளின் பிரசவத்தையும் பார்த்த டாக்டர் ரமோலாஜேனட் டயானாவும் ஜூன் 10-ந் திகஃதியே பிறந்தவர் என்பது கூடுதல் சுவாரசியம்.

கால இடைவெளி 10 ஆண்டுகள் இருந்தாலும், டாக்டர், மருத்துவமனை மற்றும் பிறந்த நாள் ஆகிய மூன்றும் மாறாமல் இருப்பது அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த அபூர்வ நிகழ்வை உலக சாதனையாக பதிவு செய்ய யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகளிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆவணங்களை ஆய்வு செய்த அமைப்புகள், “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதிகபட்ச உடன்பிறப்புகள் ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில், ஒரே மருத்துவரால் சுகப்பிரசவம் மூலம் பிறந்து சாதனை” என்ற தலைப்பில் உலக சாதனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. இதற்கான நேரடி உறுதிப்படுத்துதல் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.