கேரளாவில் தீவிரமடையும் ஷிகெல்லா பக்டீரியா தொற்று: 5 பேர் உயிரிழப்பு; 146 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஷிகெல்லா (Shigella) பக்டீரியா தொற்று வேகமாகப் பரவி வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 70 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை மொத்தம் 5 பேர் இந்தத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் மாநிலத்தில் மொத்தம் 146 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இவற்றுள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடைந்து வரும் இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆலோசகர் மருத்துவர் எஸ்.எஸ்.லால் தலைமையில் உயர்மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.